அடேங்கப்பா.., நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டாரா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரேப்பா – புகைப்படம் உள்ளே!!

0
அடேங்கப்பா.., நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டாரா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரேப்பா - புகைப்படம் உள்ளே!!
அடேங்கப்பா.., நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டாரா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரேப்பா - புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவின் வசூல் வேட்டை மன்னனாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் நண்பன். இயக்குனர் ஷங்கர் இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுமட்டுமின்றி ஒரு பக்கம் நடிகர் சத்யன் தனது காமெடி பேச்சுக்களால் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, இன்னொரு பக்கம் மில்லி மீட்டர் என்ற கேரக்டர் விஜய்யிடம் கோக்குமாக்காக கேள்வி கேட்டு காமெடி செய்து படத்துக்கு எக்ஸ்ட்ரா பிளஸ் பாய்ண்டாக அமைந்தது. மில்லி மீட்டர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயர் தான் ரின்சன் மைசன்.

என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை., பிக்பாஸ் சரவணன் மனைவி பரபரப்பு புகார் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

இவர் விஜய் டிவியில் சில காலங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, boys vs girls நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, அப்போது ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனை கலாய்த்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னரே அவருக்கு நண்பன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து ரெட்டைசுழி, சுட்ட கதை, நலனும் நந்தினியும் மற்றும் பா.பாண்டி போன்ற பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தற்போது நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள அவர் ஒரு சில குறும்படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார்.

மேலும் விரைவில் இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் மில்லி மீட்டராக இருந்த இவர் தற்போது சென்டி மீட்டராக உருவெடுத்து நல்லா தாடியும் மீசையுமாக மாசான கெட் அப்பில் இருக்கிறார். தற்போது இவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here