இனி ஆஞ்சநேயருக்கு QR குறியீட்டில் காணிக்கை செலுத்தலாம்.., புதிய வசதி அறிமுகம்!!

0
இனி ஆஞ்சநேயருக்கு QR குறியீட்டில் காணிக்கை செலுத்தலாம்.., புதிய வசதி அறிமுகம்!!
இனி ஆஞ்சநேயருக்கு QR குறியீட்டில் காணிக்கை செலுத்தலாம்.., புதிய வசதி அறிமுகம்!!

QR Code மூலம் காணிக்கை அனுப்பும் வசதி தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய வசதி:

தற்போதைய காலகட்டத்தில் பெரிய கடைகள் தொடங்கி சின்ன கடைகள் வரை அனைத்து இடங்களிலும் QR கோடு வாயிலாக மக்கள் பணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையால், நாம் எங்கு சென்றாலும் பணத்தை எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை, பேங்க் அக்கவுண்டில் பணம் இருந்தால் போதும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் மூலம் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட பணபரிவர்த்தனை ஆப் வாயிலாக பணத்தை செலுத்தலாம். இந்நிலையில் புது முயற்சியாக உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிலிண்டர் பயனர்களுக்கு ஷாக் – மொத்த சலுகையும் ரத்து! இனி முழு தொகையும் செலுத்த வேண்டியது தான்!!

இந்த கோவிலில் எப்போதும் பக்த்ர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கியூ ஆர் குறியீடு வாயிலாக பணம் அனுப்பும் புதிய வசதி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நேரடியாக கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கிற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் அதிக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புதிய வசதியால் கோவிலில் உண்டியல் திருட்டு உள்ளிட்டவைகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here