பல ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் நகுல் – அதுவும் சூப்பர் ஸ்டார் இயக்குனருடனா?

0

பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் நகுல் முக்கியமான ஒரு மனித பரிணாம வளர்ச்சி சார்ந்த ஒரு அறிவியல் கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய கதையில் நகுல்:

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் என்ற படத்தில், அறிமுகமான இவர் நடிகை தேவயானியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கந்தகோட்டை, மாசிலாமணி,காதலில் விழுந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக செய் என்ற படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு, இயக்குனர் ஆர் ஜி கிருஷ்ணன் என்பவரின் இயக்கத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். டத்தோ பி சுபாஸ்கரன் தயாரிப்பில், உருவாகும் இந்த படத்திற்கு, என் பி அருண் இசையமைக்கிறார். குரங்கிலிருந்து வந்த மனிதன், பரிணாம வளர்ச்சியின் படி எதிர்காலத்தில் என்ன ஆவான் என்ற சயின்டிபிக் கற்பனை படத்தில் இயக்குனர் படையப்பா பட கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here