நாக்பூர் இளைஞருக்கு உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று?? வெளியான திடுக்கிடும் தகவல்!!

0

நாக்பூரில் உள்ள 28 வயது இளைஞர் ஒருவருக்கு இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என்று மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்:

இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் புதிதாக உருமாற்றம் அடைந்து வேகமாக அங்கு பரவி வருகின்றது. இதனால் இங்கிலாந்து நாட்டில் இருந்து வரும் விமானங்கள் இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாக்பூரை சேர்ந்த 28 வயது நபர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து திரும்பியபோது அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவருக்கு லேசாக அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டார். அதே போல் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒன்று RT-PCR பரிசோதனைக்காகவும், மற்றொன்று புனே மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க தீவிர நடவடிக்கை – டிச.31 முதல் முழு ஊரடங்கு உத்தரவு!!

இது குறித்து நாக்பூர் நகராட்சி ஆணையர் கூறியதாவது, “அவரது மாதிரிகள் புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வெளியானதும் தான் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளதா என்று தெரிய வரும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்த வைரஸ் பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here