நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று 7, 14, 21 ஆம் தேதிகளில் இரவு 7:35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோன்று மறு மார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து 8, 15, 22 ஆம் தேதிகளில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கிய நிலையில் இன்று நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இனி ஆபாச சித்தரிப்புகளுக்கு தடை., மீறினால் இது தான் நடக்கும்., மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!