‘என் வாழ்க்கையை பறிச்சிட்டு என்ன வாழ விடாம பண்ணிட்டு இப்போ வந்து நல்லவ மாதிரி நடிக்கிற’ – நாச்சியார் மீது வெறுப்பை கொட்டும் சாரதா!!

0

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று மாயன் தன் அம்மா சாரதாவை பார்க்க உள்ளே செல்கிறார். மேலும் சாரதா இன்னும் நாச்சியார் மீது கடும் கோவத்தில் உள்ளார். இன்றைய எபிசோடு முழுக்க வேற லெவெலில் உள்ளது என்றே சொல்லலாம்.

நாம் இருவர் நமக்கு இருவர்

மாயன் இத்தனை வருடங்களுக்கு பிறகு தன் தம்பியை சென்று பார்க்கிறார். இருவரின் பாசமும் அனைவரையுமே கண்கலங்க வைத்தது. மேலும் மாயன் இத்தனை வருடங்கள் நான் கஷ்டப்பட்டேன் என்று தெரிந்தும் என்ன என்று கூட கேட்காமல் இருந்து விட்டு இப்பொழுது வந்து சமாளிக்கிறீங்க என்று கோவப்படுகிறார்.

மேலும் மாறன் இத்தனை நாட்கள் அம்மா மாயனை நினைத்து கவலைப்பட்டதை எடுத்து சொல்கிறார். மாயனும் தன் அம்மாவை பார்க்க செல்கிறார். தூரத்தில் இருந்தே பார்க்கும்போது மாயனுக்கு கண்கலங்குகிறது. அருகில் செல்ல முடியாமல் தவிக்கிறார்.

கடைசியில் கதவை பூட்டிவிட்டு சென்று விடுகிறார். கதவை அடைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்து எழுந்து வருகிறார். மாயன் வாசலில் நிற்பதை பார்க்கிறார். எதுவும் பேச முடியாமல் நிற்கிறார். நாச்சியார் அம்மாவை பார்த்தியா?? என்று கேட்க கண்கலங்கி எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்.

அடுத்ததாக நாச்சியார் மாறனிடம் வந்து, ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் மாறனுக்கு கோவம் வருகிறது. எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லை. நீங்க சொன்னதெல்லாம் மாயன் வேணும்னா நம்பி ஏமாறலாம், நான் ஏமாற மாட்டேன் என்று சொல்கிறார்.

மேலும் சாரதாவும் வர நாச்சியாரை பார்த்து முறைக்கிறார். என் வாழ்க்கையை பறிச்சிட்டு சந்தோசமாக இருக்கலாம்னு நெனச்சியா?? உன்ன என்ன பண்றேன்னு மட்டும் பாரு என்று சொல்கிறார்.

என்ன வாழவிடாம பண்றதுக்கு என்னென்ன காரியம் பண்ண, எதையுமே மறக்க மாட்டேன், ஆனால் இப்போ வந்து நடிக்கிற என்று சொல்கிறார். இதனை கேட்ட நாச்சியாருக்கு குழப்பமாக இருக்கிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here