ஜெ. அன்பழகன் மகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

0

சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை நியமனம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜெ. அன்பழகன் மகனுக்கு பொறுப்பு..!

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட அமைப்பின் பிற நிர்வாகிகள் சிற்றரசுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

mk-stalin
mk-stalin

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர்!!

சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நே.சிற்றரசு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகனை நியமனம் செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here