Thursday, March 28, 2024

N-95 மாஸ்க் கொரோனா பரவலை தடுக்காது – அரசு எச்சரிக்கை..!!

Must Read

வால்வ் வைத்த N-95 ரக மாஸ்க்குகள் தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என்று மத்திய அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், இது குறித்து, மாநில சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா பரவல்:

ஏப்ரல் முதல் இந்தியாவில் பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசால் வலியுறுத்தப்பட்டது .

முகக் கவசங்களை பயன்படுத்தும் முறை:

அதேபோல இந்த முகக் கவசங்களை தினமும் துவைக்க வேண்டும் என்றும், பருத்தியாலான துணியில் முகக் கவசம் செய்தால் நல்லது என்றும் இந்த முகக் கவசமானது, எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அதே நேரத்தில் 5 நிமிடமாவது கொதிக்கும் நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. நீரில் உப்பு சேர்த்து அலசினால் இன்னும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Coronavirus Masks
Coronavirus Masks

மேலும் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்“எப்போதும் உங்கள் முகக் கவத்தை மற்றவருடன் பகிராதீர், முகக் கவசங்களைப் பயன்படுத்தும் முன் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். முகக் கவசம் ஈரமானால் புதிதான ஒன்றைப் பயன்படுத்துங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

N-95 ரக மாஸ்க்:

அதில் அவர் கூறியதாவது “இந்த மாஸ்க் உள்ளே இருந்து வரும் தொற்றுப் பரவலை தடுப்பதில்லை. எனவே, இந்த பாதிப்பைக் கருத்தில் கொண்டு N-95 முகக் கவசங்கள் தவறாக பயன்படுத்துப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

N - 95 type mask
N – 95 type mask
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -