சீனாவில் இருந்து வரும் ‘மர்ம விதைகள்’ – அச்சத்தில் உலக நாடுகள்!!

0
Seeds
Seeds

சீனாவில் இருந்து மர்ம தபால்களில் வரும் விதைகளை நடவு செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

மர்ம விதைகள்:

அமெரிக்க மக்களுக்கு மர்ம தபால்கள் மூலமாக விதைகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சுங்க மற்றும் எல்லை அதிகாரிகள், கூட்டாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுவதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் சந்தேகத்திற்கிடமான, மர்ம விதை தொகுப்புகளை சீனாவிலிருந்து வரும் தபால்களில் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

“உங்கள் மாநில வேளாண்மைத் துறை அல்லது APHIS ஐச் சேர்ந்த அதிகாரிகள் உங்களை அறிவுறுத்தல்களுடன் தொடர்பு கொள்ளும் வரை, அஞ்சல் லேபிள் உள்ளிட்ட விதைகள் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றை திறக்க வேண்டாம். அறியப்படாத தோற்றத்திலிருந்து விதைகளை நட வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Mysterious Seeds
Mysterious Seeds

கென்டக்கி, புளோரிடா மற்றும் வட கரோலினா உள்ளிட்ட மாநில அரசுகளும் இதே போன்ற எச்சரிக்கைகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளன. கனேடிய குடிமக்கள் இந்த விதை தபால்களை பெற்றுள்ளனர், கனேடிய உணவு ஆய்வு நிறுவனம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.

அக்டோபர் 15 வரை பொது முடக்கம் – பிரதமர் அறிவிப்பு!!

“அறியப்படாத தோற்றத்திலிருக்கும் விதைகளை நட வேண்டாம். அங்கீகரிக்கப்படாத விதைகள் ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகளாக இருக்கலாம் அல்லது தாவர பூச்சிகளைக் கொண்டு செல்லலாம், அவை கனடாவில் நடப்படும் பொழுது தீங்கு விளைவிக்கும். இந்த இனங்கள் விவசாய மற்றும் இயற்கை பகுதிகளை ஆக்கிரமிக்கக்கூடும், இதனால் எங்கள் தாவர வளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுகிறது ”என்று கூறியுள்ளது.  மேலும் இந்த விதைகள் உயிரி ஆயுதமாக கூட இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here