மியான்மார் ஜேட் சுரங்க விபத்து – 160 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!!

0

வடக்கு மியான்மரில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இரண்டாவது நாளான இன்றும் தேடல் முயற்சிகள் தொடருகிறது.

சுரங்க நிலச்சரிவு:

சுரங்கக் கழிவுகளின் குவியல் வியாழக்கிழமை ஒரு ஏரியில் சரிந்து பல தொழிலாளர்களை மண் மற்றும் தண்ணீருக்கு அடியில் புதைத்தது. வியாழக்கிழமை இரவு, மீட்புப் பணியாளர்கள் 162 சடலங்களை மீட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 161 மற்றும், 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பலியானவர்களில் பாதி பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, சுரங்கத்திற்கு அருகில் ஒரு சிறிய கூடாரத்தில் வசித்து வந்த பலர் அங்கு குடியேறியவர்கள் ஆவர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி இன்று அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மியான்மரின் தொழிற்துறையின் மையமான கச்சின் மாநிலத்தின் மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஹபகாந்தின் ஜேட் சுரங்கங்களில் கொடிய நிலச்சரிவுகள் மற்றும் பிற விபத்துக்கள் வழக்கமானவை.மேலும் மியான்மர் முழுவதும் இருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக ரத்தினங்களைச் சேகரிக்கின்றனர்.

ராணுவ வீரர்களின் தியாகத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது – மோடி புகழாரம்..!

வியாழக்கிழமை விபத்து ஐந்து ஆண்டுகளில் மிக மோசமானது.இதற்கு முன் 2015 ஆம் ஆண்டு சரிவில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர், இது தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அழைப்புகளை வலுப்படுத்தியது. மேலும் 50 பேர் 2019 ல் இறந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here