விளம்பரம் பார்த்தால்  பணம்., மோசடி செய்த (my v3 ads) நிறுவனர் போலீசில் ஆஜர்., வெளியான முக்கிய அப்டேட்!!!

0
விளம்பரம் பார்த்தால்  பணம்., மோசடி செய்த (my v3 ads) நிறுவனர் போலீசில் ஆஜர்., வெளியான முக்கிய அப்டேட்!!!
இன்றைய நவீன சமுதாயத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அப்படி ஸ்மார்ட் போன் விளம்பரம் பார்த்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை  (my v3 ads) என்ற ஒரு நிறுவனம் அறிவித்திருந்தது.மேலும் இந்த நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானமும் பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக கூறி கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தமிழக, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு திரண்டு வந்தனர். மேலும் தங்களுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பளித்த இந்த நிறுவனத்தின் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்திருந்தனர். இப்படியான சூழ்நிலையில் நிறுவனத்தின் இயக்குனர் சக்தியான கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here