கிராமத்து ஸ்டைலில் “மட்டன் மசாலா கிரேவி” ரெசிபி – கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!!

0

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அசைவ பிரியர்களாக தான் இருப்பர். சிலர் மட்டன் செய்வது கஷ்டம் என்று நினைத்திருப்பர். ஆனால், மட்டன் செய்வது மிகவும் சுலபமான ஒன்று தான். அந்த வகையில் ஈஸியான அதே சமயம் டேஸ்ட்டியான “மட்டன் கிரேவி” எவ்வாறு சுலபமாக செய்வது என்பது குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • எலும்பு இல்லாத மட்டன் – 1 கிலோ
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
  • மிளகு – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பே இலை, பட்டை, கிராம்பு & ஏலக்காய் – 2 அல்லது மூன்று
  • வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3
  • தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
  • நெய் – 2 தேக்கரண்டி (வேண்டுமென்றால்)
  • கொத்தமல்லி – கார்னிஷ் செய்ய

செய்முறை

முதலில், மட்டனை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். அதனை ஒரு தனி பாத்திரத்தில் வைத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனை நன்றாக மட்டனில் ஊற வைக்க வேண்டும். அதனை ஒரு 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு, குக்கரை காய வைத்து அதில் இந்த மட்டனை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். 3 விசில்களுக்கு பிறகு அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

கொரோனா பரவல் எதிரொலி – ஒலிம்பிக் போட்டிக்கு ரசிகர்கள் நோ என்ட்ரி!!

இதற்கு பின்பாக, ஒரு பாத்திரத்தினை எடுத்து காய வைக்க வேண்டும். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பே இலை, பட்டை, கிராம்பு & ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு, இதில் வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அதனை நன்றாக கிளறி விடவும். பின்பு, இதில் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடைசியாக இதில் அந்த மட்டனை சேர்த்து அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனை ஒரு 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக, இதில் நெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்!!

சூடான “மட்டன் மசாலா கிரேவி’ தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here