வீட்லயே எளிய முறையில் செய்யலாம் மட்டன் கபாப் – ட்ரை பண்ணி அசத்துங்க!!

0

அசைவ உணவு என்றாலே பலருக்கு கொள்ளை பிரியம் தான். அதுவும் எப்பொழுதும் வீட்டில் செய்யும் குழம்பு, கிரேவி வகைகளை விட வெரைட்டியான உணவு வகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் மிகவும் வித்தியாசமான மட்டன் கபாப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

மட்டன் கொத்துக்கறி – 200 கிராம்

அரைத்த பொட்டுக்கடலை – 1/4 கப்

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

சீரக தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

புதினா – சிறிது

கொத்தமல்லி – சிறிது

இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்

தயிர் – 1/4 கப்

சோள மாவு – 1 டீஸ்பூன்

உப்பு – சிறிது

 

செய்முறை:

முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்றாக மிக்சியில் அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் மேலே கூறிய அரைத்த பொட்டுக்கடலை, நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தயிர் விட்டு நன்றாக மட்டன் கொத்துக்கறியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

தற்போது ஒரு குச்சியில் நீளவாக்கில் இந்த மட்டன் கலவையை பிடித்து கொள்ளவும். பின்னர் உடையாத வண்ணம் இதை எடுத்து தவாவில் எண்ணெய் விட்டு நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும். தற்போது சுவையான ருசியான மட்டன் கபாப் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here