“ஆற்காடு ஸ்டைல் மட்டன் சாப்ஸ்” ரெசிபி – உங்க வீட்லயே செய்யலாம் வாங்க!!

0

மட்டன் வாங்கும் போதெல்லாம் ஒரே மாதிரி சமைச்சு சாப்பிடாமல் கொஞ்சம் வேற ஸ்டைலில் சமைச்சு சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கா. அப்போ இந்த ஆற்காடு ஸ்டைல் மட்டன் சாஃப்ஸ் செஞ்சு பாருங்க. ரொம்ப சுலபமா இருக்கும். அதே நேரத்துல ரொம்ப அற்புதமான சுவையாவும் இருக்கும். குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். “ஆற்காடு ஸ்டைல் மட்டன் சாஃப்ஸ்” எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 500gm
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 துண்டு
கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டன் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு பேஸ்ட் பதத்திற்க்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு ஒரு பௌலில் மட்டன், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து இந்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து ஒரு 7 விசில் வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வேக விட வேண்டும்.

மட்டன் துண்டுகளை இந்த மசாலாவில் இருந்து தனியே எடுத்து வைக்க வேண்டும். மசாலாவில் மீதம் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வேண்டும். இந்த மசாலா கலவை வற்றி கெட்டியானதும் அதையும் தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

மழை நேர ஜலதோஷத்தை விரட்டும் “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்”

இப்பொழுது ஒரு பானில் மட்டன் துண்டுகளை நெய் ஊற்றி ரோஸ்ட் ஆகும் வரை திருப்பி திருப்பி விட வேண்டும். அதன் மேலே கெட்டியாக உள்ள மசாலா கலவையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.  இப்பொழுது சுவையான “ஆற்காடு மட்டன் சாஃப்ஸ்” ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here