
கோலிவுட் திரையில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இப்படத்தின் கதைக்களம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து இதன் 2 ஆம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். மேலும் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் கடந்த 19 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் 3 நாட்களில் உலக அளவில் 18 கோடியை வசூலாக பெற்றுள்ளது. மேலும் ‘ பிச்சகாடு 2’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி, அங்கு மட்டும் 9.5 கோடி வசூலை குவித்துள்ளது.
ரூ.1,000 மட்டுமே போதும் ரூ.5.27 லட்சம் வாங்கிக்கங்க?? தமிழ்நாடு அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!!!
இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதன் 3 ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக விஜய் ஆண்டனி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் ஒரு புது விதமான கதையுடன் உருவாக இருக்கும் 3 வது பாகம் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என அதில் தெரிவித்துள்ளார்.