மீண்டும் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் – ட்விட்டரில் ட்ரெண்டாகும் பதிவு!!

0

தனது இசையில் உருவாகி வரும் தமிழ் படத்தின் சவுண்ட் டிராக் டிசம்பர் மாதம் வெளியாகும் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சவுண்ட் ட்ராக் ரிலீஸ்:

உலக அளவில் இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.  இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்றுள்ள இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் விஜய்யின் பிகில் படத்திற்கு இசையமைத்திருப்பார். அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த, 99 சாங்ஸ் என்ற ஹிந்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது, பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் இரவின் நிழல் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது ஏ.ஆர்.ரகுமான் தனது ரசிகர்களுக்கு முக்கிய சர்ப்ரைஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது டிசம்பர் மாதம் தமிழ் படத்தின் சவுண்ட் ட்ராக் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதை Guess செய்யும்படியும் கேட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here