இன்றைய சினிமா துறையில் டாப் இசையமைப்பாளராக இருந்து வரும் ராக் ஸ்டார் அனிருத் பல முன்னணி நடிகர்களின் படத்தை கை வசம் வைத்துள்ளார். சமீபத்தில் அவர் இசையில் வெளிவந்த ஜெயிலர்,ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே காத்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் இவருடைய மியூசிக் எப்படி இருக்க போகிறது என்று பலரும் பலவித எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டிற்குள் திருமணம் நடைபெற இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்னரும் இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான சமயத்தில் இருவரும் வாயை திறந்து பேசவில்லை. தற்போது மீண்டும் இந்த கிசுகிசு எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இரு தரப்பில் இருந்து தெரிவித்தால் மட்டுமே உண்டு