சந்ரமுகியில் ரஜினிகாந்த் கருத்துக்கு விளக்கம் கொடுத்த முக்கிய பிரபலம்!!!

0
சந்ரமுகியில் ரஜினிகாந்த் கருத்துக்கு விளக்கம் கொடுத்த முக்கிய பிரபலம்!!!
சந்ரமுகியில் ரஜினிகாந்த் கருத்துக்கு விளக்கம் கொடுத்த முக்கிய பிரபலம்!!!

இசையமைப்பாளர் வித்யாசாகர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் வித்யாசாகர்:

தமிழ் சினிமாவில் இசையமைத்த அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தவர் தான் வித்யாசாகர். அதில் குறிப்பாக சந்திரமுகி, கில்லி, தூள், சுள்ளான் போன்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. பின் மலையாளம் பக்கம் ஒதுங்கிய வித்யாசாகர் தற்போது வரை பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் பேசியதாவது, சந்திரமுகி திரைப்படம் என்னுடைய பேவரைட். அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. வேறு எந்த திரைப்படமும் இந்த அளவிற்கு ஓடியது இல்லை என்று கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், சந்திரமுகி ஆடியோ லாஞ்சில் ரஜினி சார் நான் யானை இல்லை குதிரை விழுந்தா உடனே எந்திச்சுருவேன் என்று சொன்னது உங்களுக்கு எப்படி இருந்தது என்று வித்தியாசகரிடம் கேட்டார்.

யாருமே பார்த்திடாத சரோஜா தேவியின் குடும்ப புகைப்படம்.., Rare கிளிக்ஸ் வைரல்!!

அதற்கு அவர், ரஜினி சார் அப்படி பேசியதற்கு அவருடைய மனநிலை தான். அதே போல் படத்தோட சக்சஸ் மீட்டில் ரஜினி சார் மேடையில், நான் வித்தியசாகரிடம் ரெண்டு சாங் ஹிட் வேணும் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் 5 பாடலையும் ஹிட் பண்ணி தரேன் என்று கூறினார். அவர் சொன்னது மாதிரியே ஹிட் பண்ணி கொடுத்தேன். அதற்கு Love You வித்யாசாகர் என்று கூறினார். அது தான் எனக்கு அதிகமாக சந்தோசத்தை கொடுத்தது என வித்தியாசாகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here