இந்தியாவில் முதன் முதலாக அந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன்.., ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமிதம்!!

0
இந்தியாவில் முதன் முதலாக அந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன்.., ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமிதம்!!
இந்தியாவில் முதன் முதலாக அந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன்.., ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமிதம்!!

ஹிப்ஹாப் தமிழா’ ஆதி Music Entrepreneurship என்ற பிரிவில் டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

ஹிப்ஹாப் தமிழா’ ஆதி:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வீரன். PT சார் என்ற இரண்டு படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், தற்போது Music Entrepreneurship என்ற பிரிவில் இவர் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சந்தோஷமான செய்தியை அவரே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நான் பி ஹெச் டி முடித்துள்ளேன். இனிமேல் என்னை டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி என்று அழையுங்கள். ஆனால் படித்து வாங்கிய பட்டம். Music Entrepreneurship என்ற பிரிவில் நான் பிஹெச்டி முடித்துள்ளேன்.

டாஸ் போட்ட பிறகு கூட இதை செய்யலாமா?? ஐபிஎல் விதியில் ஏற்பட்ட புது மாற்றம்!!

எனக்கு தெரிந்த வரை Music Entrepreneurship துறையில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெற்றது இந்தியாவிலே நான் தான் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தற்போது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here