நீங்க புரட்டாசி விரதம் இருக்குறவங்களா?? அப்போ இந்த மஷ்ரூம் Stuffed இட்லி உங்களுக்காக தான்!!!

0
நீங்க புரட்டாசி விரதம் இருக்குறவங்களா?? அப்போ இந்த மஷ்ரூம் Stuffed இட்லி உங்களுக்காக தான்!!!
நீங்க புரட்டாசி விரதம் இருக்குறவங்களா?? அப்போ இந்த மஷ்ரூம் Stuffed இட்லி உங்களுக்காக தான்!!!

இட்லி என்பது நமது பாரம்பரிய உணவு. இதில் தற்போது பல வெரைட்டி வந்து விட்டது. இதனால் இட்லி பிடிக்காதவங்க கூட இதை விரும்பி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது நாம் இந்த பதிவில் மஷ்ரூம் Stuffed இட்லியின் செய்முறையை தான் பார்க்க உள்ளோம்.

‘பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!

தேவையான பொருட்கள்

காளான் – 250 கிராம்

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

இட்லி மாவு -தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

நீங்க புரட்டாசி விரதம் இருக்குறவங்களா?? அப்போ இந்த மஷ்ரூம் Stuffed இட்லி உங்களுக்காக தான்!!!
நீங்க புரட்டாசி விரதம் இருக்குறவங்களா?? அப்போ இந்த மஷ்ரூம் Stuffed இட்லி உங்களுக்காக தான்!!!

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு பச்சை வாடை போனதும் அதில் மஷ்ரூம் சேர்த்து, சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.

மஷ்ரூம் வெந்து எண்ணெய் பிரிந்து மேலெழும்பி வரும் வேளையில் அடுப்பை அணைத்து விடவும். அதன் பின்னர் அடுப்பில் இட்லி கொப்பரையை வைத்து அரை கரண்டி மாவு ஊற்றி அதில் மஷ்ரூம் கலவை சேர்த்து இட்லியை அவித்து எடுக்கவும். தற்போது சுவையான மஷ்ரூம் Stuffed இட்லி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here