Tuesday, May 18, 2021

சுவையான “சைவ சுக்கா” – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

Must Read

சைவ பிரியர்களுக்கு கண்டிப்பாக காளான் என்றால் பிடிக்கும். பல தீராத நோய்களையும் குணப்படுத்தும் திறம் காளானில் இருக்கிறது. காளான் ரத்த சோகை, வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமையை படைத்துள்ளது. இன்று காளானை வைத்து “சைவ சுக்கா” ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • காளான் – 250 கிராம்
  • சோம்பு – 2 டீஸ்பூன்
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1
  • கருவேப்பில்லை – தேவையான அளவு
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

முதலில், காளானை நன்றாக சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின், மிஸ்சியில் சோம்பு மற்றும் மிளகு ஆகியவற்றை சேது கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின், காடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், இஞ்சி & பூண்டு விழுதினை சேர்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லி தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையினை நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் எடுத்து வைத்துள்ள காளானை சேர்க்க வேண்டும்.

‘ரைசா முக வீக்கத்துக்கு சரக்கு தான் காரணமா? அவருக்கு எல்லா விஷயமும் தெரியும்’ – விளக்கமளித்த டாக்டர்!!

பின், இந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் சேது கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் இதனை மூடி கொதிக்க விட வேண்டும். பின், கடைசியாக நாம் அரைத்து வைத்துள்ள மிளகு தூள் மசாலா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “சைவ காளான் சுக்கா” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் – காவல்துறை அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை காவல்துறை அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. தமிழக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -