Saturday, May 15, 2021

டேஸ்டியான “காளான் கறி குழம்பு” – செஞ்சு அசத்துங்க!!

Must Read

சைவ பிரியர்களாக இருப்பவர்கள் அதிகமாக விரும்புவது மஸ்ரூம் என்று கூறப்படும் காளானை தான். காளானை வைத்து செய்யும் ஒரு அருமையான உணவான “காளான் கறி குழம்பு” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • காளான் – 400 கிராம்
  • பச்சை பட்டாணி – 1/2 கப்
  • முந்திரி – 10
  • தக்காளி – 3
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 2
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • மிளகு – 2
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • பிரெஷ் கிரீம் – 1 டீஸ்பூன்
  • கொத்துமல்லி – தேவையான அளவிற்கு
  • உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில், தக்காளியை சில நிமிடங்கள் வேக வைத்து விட்டு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு, மிக்ஸிசில் தக்காளி மற்றும் முந்திரி பருப்பினை போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இது வதங்கியதும் இதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றினையும் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – தடுப்பூசியின் வீரியம் குறைகிறதா?? காரணம் என்ன??

பின்பு, இதில் வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் தக்காளி கலவை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின்பு, பட்டாணி மற்றும் காளான் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி விட்டு அதனை 15 நிமிடங்களுக்கு மூடி வைத்து விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

15 நிமிடங்களுக்கு பின்பு, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கடைசியாக பிரெஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இதனை ரொட்டி அல்லது சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம். அவ்ளோ தான்!!

சூடான “காளான் கறி குழம்பு” தயார்!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -