சுவையான “மஸ்ரூம் கிரீன் சில்லி” – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது காளான் தான். காளானை வைத்து பல விதமான உணவுகளை செய்யலாம். இன்று ஈஸியாக செய்ய கூடிய “மஸ்ரூம் கிரீன் சில்லி” ரெசிபி குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • காளான் – 200 கிராம்
  • பச்சை மிளகாய் – 4
  • மிளகு தூள் – 4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 4 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், காளானை நன்றாக கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.

இதே நாளில் சேவாக் செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

இந்த கலவை நன்றாக வதங்கியதும், அதில் காளானை சேர்க்க வேண்டும். பின், அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும். பின், அதனை மூடி வைத்து விட வேண்டும். பின், அதில் மிளகு தூள் சிறிதளவு சேர்க்க வேண்டும். அதனை கிண்டி விட்டு மூடி வைத்து விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியே சிறிது சிறிதாக மிளகு தூள் சேர்த்து முடி வைத்து கொண்டே வரவும். கடைசியாக அதில் உப்பு சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். இதில் தண்ணீர் தனியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

                           சுவையான “மஸ்ரூம் கிரீன் சில்லி” ரெசிபி தயார்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here