யம்மியான “காளான் பிரியாணி” ரெசிபி – வீக்எண்டு ஸ்பெஷல்!!

0

அனைவருக்கும் பிரியாணி என்றால் தனி பிரியம் தான். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தது என்றால் அது “காளான் பிரியாணி” தான். அதனை எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • காளான் – 200 கிராம்
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • பிரியாணி இலை – 2
  • அண்ணாச்சி பூ – 2
  • கல்பாசி – 2
  • பாசுமதி அரிசி – 1/2 கிலோ
  • பூண்டு – 2
  • இஞ்சி – 2
  • சோம்பு – 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • உப்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 2 (நீள வாக்கில் நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • புதினா – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை அடுத்து அந்த கலவையினை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், குக்கரை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ மற்றும் கல்பாசி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

இந்தியாவில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இது வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்க்க வேண்டும். பொன்னிறமாக வரும் வரை பார்த்து விட்டு அதில் நாம் அரைத்து வைத்துள்ள கலவையினை சேர்க்க வேண்டும். பின், இதில் தக்காளி, பச்சை மிளகாய் இரண்டு என்று அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள காளானை சேர்க்க வேண்டும். பின், அதில் மிளகாய் தூள், உப்பு சேர்க்க வேண்டும். ஒரு முறிய கிண்டி விட்டு அதில் எடுத்து வைத்துள்ள அரிசியினை போட்டு ஒரு முறை கிண்டி விடவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி விட்டு குக்கரை முடி வைத்து விட வேண்டும். குக்கரில் 2 விசில் வந்ததும் அதனை இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

சூடான மற்றும் ஸ்பைசியான “காளான் பிரியாணி” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here