சிக்கன் சுவையில் காளான் 65 ரெசிபி – கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!!

0

சைவ பிரியர்களின் விருப்பமான உணவு என்றால் அது காளான் முதல் இடத்தை பிடித்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு அதன் சுவையும் இருக்கும். இப்பொழுது சுவையான முறையில் சிக்கன் 65 ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காளான் – 100 கி

பச்சை மிளகாய் – 4

வெங்காயம் – 1

கறிவேப்பில்லை – சிறிது

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

சோளமாவு – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு சிறிய பௌலில் மிளகாய்த்தூள். மஞ்சள்தூள், கரம் மசாலா, சோளமாவு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு இவை மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து அதில் சேர்த்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த கலவையை நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது நாம் எடுத்து வைத்துள்ள காளானை நன்கு கழுவி அதனுடன் இந்த காளானை நறுக்காமல் முழுசாக அந்த மசாலாவில் போட்டு பிரட்டவும். இப்பொழுது இதனை 1 மணி நிறம் வரை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்பொழுது எண்ணெய்யை சூடாக்கி அதில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான காளான் 65 தயார். இதனை சாம்பார், தயிர் சாதத்திற்கு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here