நீங்க வேற லெவல் சார் – தன் உயிரை பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!!

0

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர் தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார். தற்போது அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை:

தற்போதைய காலங்களில் மனித நேயத்தை நாம் ஒரு சில இடங்களில் மட்டுமே காண முடிகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்தனர். மேலும் பலர் பசியினால் வாடினர். அவர்களுக்கு சிலர் மனித நேயத்துடன் பண உதவி மற்றும் உணவு கொடுத்தும் அவர்களின் பசியை போக்கி வந்தனர். இதனால் நம் நாட்டில் மனித நேயம் இன்னும் இருந்து வருகிறது என்பதை காணமுடிகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் மும்பை ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் ஓர் பெண் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பெண்ணின் குழந்தை ரயில் தடத்திற்குள் விழுந்துவிட்டாள். அந்த நேரத்தில் அந்த தடத்தில் விரைவு வண்டி வந்துகொண்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எதிரொலி – டாஸ்மாக் கடைகளுக்கு நேரங்கள் குறைப்பு!!

இதனால் பதட்டமடைந்த அந்த குழந்தையின் தாய் என்ன செய்வது என்று புரியாமல் பதறினார். அந்த நேரத்தில் ரயில்வே பணியில் இருந்த மயூர் ஷெல்கே என்னும் ஊழியர் விரைந்து ஓடி, தனது உயிரை கூட பொருட்படுத்தாமல், தடத்தில் குதித்து குழந்தையை காப்பாற்றி தனது உயிரையும் காப்பாற்றினார் மயூர் ஷெல்கே. தற்போது அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here