மாநிலத்தில் செப்.27 ல் போராட்டத்தை அறிவித்த ஆசிரியர்கள் – ஊதியம் வழங்காததால் அதிரடி முடிவு!!

0
மாநிலத்தில் செப்.27 ல் போராட்டத்தை அறிவித்த ஆசிரியர்கள் - ஊதியம் வழங்காததால் அதிரடி முடிவு!!

அரசுக்கு எதிராக வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி, போராட்டம் நடத்த இருப்பதாக மும்பை நகரை சேர்ந்த உயர் கல்வி நிலையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் அறிவிப்பு:

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள ஜூனியர் கல்லூரி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் உயர்கல்வி துறை ஆசிரியர்கள், அரசுக்கு எதிராக முக்கிய போராட்டம் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளனர். அதாவது, ஊழியம் வழங்க தாமதம் மற்றும் HSC 2022 தாள் மதிப்பீடு ஆகியவற்றை கண்டித்து வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி,மும்பை வாஷியில் உள்ள வாரிய அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது குறித்து தெரிவித்த அவர்கள், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்த அறிவிப்பு அரசின் சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான ஊதியம் மற்றும் நியமன ஆணை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படாதது உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை கொண்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அலுவலக ஊழியர்களே, மாணவர்களே உஷார் – நீங்க யூஸ் பண்ற இந்த ஆப்-க்கும் இப்போ ஆப்பு வச்சிட்டாங்க!!

ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சனையில் அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here