#MIvsRR ஐபிஎல் போட்டி – வெற்றிக்காக போராடும் இரு அணிகள்!வெல்லப்போவது யார்?

0

இந்தியாவில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்குகிறது.

மும்பை vs ராஜஸ்தான்

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிக மோசமாக அமைந்து உள்ளது. இரு அணிகளும் மிக மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இந்த போட்டி கடுமையாக இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மும்பை அணியில் பல அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் சொற்பிக்கவில்லை. மும்பை அணியில் இதுவரை ரோஹித் மற்றும் சூர்யகுமார் மட்டுமே மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இன்றைய போட்டியில் மும்பை அணியில் அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்த தொடர் மூலம் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் சஞ்சு. இந்த தொடரில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட ராஸ்தான் அணி பின்பு முழுவதும் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 11 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளன. 1 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. இரு அணிகளும் இனி தொடர் வெற்றியை பெற்றால் மட்டுமே காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here