#MIvsCSK ஐபிஎல் போட்டி – வெற்றி முத்திரையை பதிக்க போவது யார்?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மும்பை vs சென்னை:

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இந்த தொடரில் மும்பை அணி சென்னை மைதானத்தில் விளையாடுவதற்கு மிக கடுமையாக தினறியது. பின்பு டெல்லிக்கு வந்த பின்பு தான் விளையாடிய முதல் போட்டியிலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்தாடியது. எனவே இந்த போட்டி மூலம் மும்பை அணி பழைய பார்மிற்கு திரும்பியதால் மும்பை அணி ரசிகர்கள் படு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரை இந்த அணி விளையாடிய 6 போட்டிகளில் 3 முறை மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் மறுபக்கம் இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் தனது அதிரடியை வெளிப்படுத்தியுள்ளது சென்னை அணி. அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – பிக் பாஸ் பிரபலத்தின் அதிரடி மாற்றம்! ஷாக்கான ரசிகர்கள்!!

சென்னை மற்றும் மும்பை அணிகளின் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்த இரு அணிகளும் இந்த தொடரில் முதல் முறை மோதவுள்ளதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 30 முறை மோதியுள்ளனர். அதில் அதிகபட்சமாக மும்பை அணி 18 முறையும் சென்னை அணி 12 முறையும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here