5 நட்சத்திர வீரர்களை விடுவித்த மும்பை இந்தியன்ஸ்…, சூடுபிடிக்க காத்திருக்கும் ஐபிஎல் மினி ஏலம்!!

0
5 நட்சத்திர வீரர்களை விடுவித்த மும்பை இந்தியன்ஸ்..., சூடுபிடிக்க காத்திருக்கும் ஐபிஎல் மினி ஏலம்!!
5 நட்சத்திர வீரர்களை விடுவித்த மும்பை இந்தியன்ஸ்..., சூடுபிடிக்க காத்திருக்கும் ஐபிஎல் மினி ஏலம்!!

அடுத்த மாதம் ஐபிஎல் 16 வது சீசனுக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் தங்களது 5 நட்சத்திர வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்:

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் தொடர் குறித்த அப்டேட் வெளியானதால், ரசிகர்கள் இதன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த அப்டேட்டானது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனுக்கு வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் டிசம்பர் மாதம் 23ம் தேதி கொச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது தான். இதனை தொடர்ந்து, வரும் 15 ம் தேதிக்குள் ஐபிஎல் சீசனில் உள்ள ஒவ்வொரு அணியும், தங்களுக்கு வேண்டிய 10 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, 5 வீரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

பல சதங்களை குவிக்கும் இளம் வீரர்…, T20 WC அணியில் ஏன் எடுக்க வில்லை?? பிசிசிஐ யிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!!

இதையடுத்து, கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 4 ல் மட்டும் வெற்றி பெற்று மோசமான தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த சீசனுக்கு பல வாய்ந்த வீரர்களை கொண்டு களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், தங்கள் அணியில் உள்ள அதிரடி வீரர்களான, பொல்லார்ட், ஹிர்திக் சௌக்கின், ஃபெபியன் ஆலன், மயங்க் மார்கண்டே மற்றும் டைமல் மில்ஸ் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here