பும்ராவின் இடத்தை பிடித்த சச்சின் மகன்…, தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!!

0
பும்ராவின் இடத்தை பிடித்த சச்சின் மகன்..., தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!!
பும்ராவின் இடத்தை பிடித்த சச்சின் மகன்..., தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!!

மும்பை இந்தியன்ஸ் அணியானது, இம்முறை ஐபிஎல் பட்டத்தை வென்றே தீர வேண்டி, தரமான பிளேயிங் தற்போது தேர்வு செய்து வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் 16 வது சீசன், தொடங்குவதற்கு ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ள இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் அணியில் இணைந்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் திரும்பியது. இதனால், நடப்பு வருடம் மீண்டும் சாம்பியன் பட்டதை வெல்ல வேண்டி, ஏலத்தில் மூலம் தரமான வீரர்களை வாங்கி தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனாலும், டெத் ஓவரில் ஸ்பெசலிஸ்ட்டான பும்ரா காயம் காரணமாக ஐபிஎல்லிருந்து விலகி இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு தான். இதனால், கடந்த 2020 முதலே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வாய்ப்புக்காக காத்திருந்த, சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பிளேயிங் லெவனில் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பிளேயிங் லெவன் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது.

ஜெய் நடிக்கும் தீராக்காதல் திரைப்படம்.., பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!

மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், ரமன்தீப் சிங், குமார் கார்த்திகேயா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here