டிச.4 முதல் ஜன.2 வரை மீண்டும் முழு ஊரடங்கு., இதற்கெல்லாம் அனுமதி இல்லை! காவல்துறை உத்தரவு!!

0
டிச.4 முதல் ஜன.2 வரை மீண்டும் முழு ஊரடங்கு., இதற்கெல்லாம் அனுமதி இல்லை! காவல்துறை உத்தரவு!!
டிச.4 முதல் ஜன.2 வரை மீண்டும் முழு ஊரடங்கு., இதற்கெல்லாம் அனுமதி இல்லை! காவல்துறை உத்தரவு!!

நாளை மறுநாளான டிசம்பர் 4ஆம் தேதி முதல், அடுத்த மாதம் ஜனவரி 2-ம் தேதி வரை நகர் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக, மும்பை நகர காவல் துறை அறிவித்துள்ளது.

காவல்துறை அதிரடி :

கடந்த கொரோனா காலகட்டத்தில், தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது, தொற்றின் பரவல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை நகரத்தில், நாளை மறுநாளான டிசம்பர் 4 முதல் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வரை நகர் பகுதி முழுவதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொது அமைதியை நிலை நாட்டவும், சட்ட ஒழுங்கில் இடையூறு ஏற்படாமல் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் 5 அல்லது மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் மொத்தமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மும்பை காவல்துறையின் மிஷன் துறை ஆணையர் விஷால் தாக்கூர், வெடி வெடித்தல் மற்றும் பொது ஊர்வலம் போன்ற மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும், திருமணம், இசைக் கச்சேரி போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயோ.,தமிழகத்தில் நாளைக்கு இங்கெல்லாம் மின்தடையா (03.12.2022) – முழு விவரங்கள் உள்ளே!!

அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், நீதிமன்றம் போன்ற பொது இடங்களில் கூரிய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வணிகத்திற்காகவோ அல்லது பொது நடவடிக்கைக்காகவோ நுழைய அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது, நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here