மும்பையில் 57% குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா எதிரப்பு சக்தி – ஆய்வில் தகவல்!!

0

மஹாராஷ்டிர மாநில மும்பையில் 57 சதவீத குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த நகரங்களில் மும்பையும் ஒன்று. அங்குள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பரவல் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்கள்!!!

இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக், டாடா ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் மும்பை மாநகாராட்சி ஆகிய மூன்றும் இணைந்து மும்பையில் ஜூலை முதல் வாரத்தில் முக்கிய சர்வே ஒன்றை நடத்தின. மும்பையில் புறநகர்ப்பகுதியான டைசர், செம்பூர் மற்றும் மத்திய மும்பையில் சயான்-மட்டுங்கா ஆகிய 3 பகுதிகளில் 3 வார்டுகளில் 7000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் போது இம்மாதிரிகளில் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் 42 சதவீத மக்கள் குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள். எந்த அறிகுறியும் இல்லாமல் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பாதித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகி்ன்றனர். இதன்படி மும்பையில் மட்டும் 57 சதவீத குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கனமழை – இடுக்கி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !!

மேலும் குடிசை இல்லாத பகுதியில் வசிக்கும் நகர்ப்புற மக்களிடத்தில் 16 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு உண்டாகி உள்ளதாக டாடா ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நிபுணர் சந்தீப் ஜூனேஜா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here