Thursday, April 22, 2021

முகேஷ் அம்பானி வீட்டின் முன் நின்ற வெடிபொருட்கள் நிறைந்த கார் – போலீசார் தீவிர விசாரணை!!

Must Read

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு ஓர் சொகுசு கார் வெடிபொருட்களுடன் நின்றது. தற்போது இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகேஷ் அம்பானி:

உலக அளவில் பெரிய பணக்காரராக திகழ்கிறார் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. மேலும் இவர் அனைத்து தொழில்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார் என்று கூறலாம். ஏனெனில் இவர் பெட்ரோல், தொலைத்தொடர்பு, கிரிக்கெட் என பல தொழில்களில் தனது முதலீட்டை செலுத்தி மிக சிறப்பாக வளர்ந்து வருகிறார். இவருக்கு மும்பையில் அண்டிலியா என்ற பெயருடன் ஓர் சொகுசு பங்களா உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பங்களாவிற்கு வெளியே சந்தேகப்படும் வகையில் சில மணி நேரமாக ஓர் சொகுசு கார் நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மும்பை போலீசார் அதனை சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் வெடி பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர். அதன்பின்பு மும்பை போலீசார் வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் அந்த பகுதிக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தற்போது போலீசாரும் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விரைவில் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை தருமாறு குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்: தற்போது கச்சா எண்ணெயின் பீபாய் விலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -