உலக டாப் பணக்காரர்களில் 5வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி!!

0

ஒரே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமாராக 21,500 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம்..!

கடந்த மார்ச் 2020 பங்குச் சந்தை வீழ்ச்சியின் போது 875 ரூபாயில் இருந்து ரிலையன்ஸின் பங்கு விலை, அடுத்தடுத்த மாதங்களில், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டே வருகின்றன. இன்று ரிலையன்ஸ் பங்கு விலை புதிய உச்சமாக 2,010 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் 49 சதவிகித பங்குகளை நம் முகேஷ் அம்பானி தான் வைத்திருக்கிறார். எனவே ஒரே நாளில் ரிலையன்ஸ் பங்கு விலை அதிகரித்ததால் 2.9 பில்லியன் டாலர் சுமார் 21,500 கோடி ரூபாய் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் மொத்த விற்பனையை அறிமுகப்படுத்தும் பிளிப்கார்ட் நிறுவனம்!!

5வது இடத்துக்கு முன்னேற்றம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனியின் பங்கு விலை உயர்வால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, இன்றைக்கு 74.7 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. எனவே, தற்போது உலகின் 5வது பெரிய பணக்காரராக உயர்ந்து இருக்கிறார். அடுத்த டார்கெட் உலகம் முழுக்க வாடிக்கையாளர்களைக் கொண்வைத்திருக்கும் ஃபேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் தான். ஆனால் அவர் கொஞ்சம் தொலைவில் 89 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் தான் உலகின் முன்னனி முதலீட்டாளரான வாரன் பஃபெட்டை சொத்து மதிப்பில் பின்னுக்குத் தள்ளினார் முகேஷ் அம்பானி. அதே போல கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி பேஜையும் சொத்து மதிப்பில் பின்னுக்குத் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here