தன் சொந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் முகேன் ராவ் – வைரலாகும் ஹாஷ்டேக்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான முகேன் ராவ் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் நடித்த பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் முகேன் ராவ்

மலேசியாவை சேர்ந்தவர் முகேன் ராவ் ஆல்பம் சாங் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ் சரளமாக பேச தெரிந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த முகேன் சீசன் நடுவில் அவரின் அவதாரம் அனைவரையும் ஆடவைத்தது.

எங்கு சென்றாலும் முகேன் ராவ் பற்றிய பேச்சு தான். முகேன் ராவின் அம்மாவை இன்டெர்வியூ எடுக்க மலேசியா வரை சென்றிருந்தனர். அந்த அளவிற்கு முகேன் ராவிற்கு ஆதரவு அதிகரித்தது.

கடைசியில் இவர் பாடிய ஒரே பாடலில் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். அதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகினார். இப்பொழுது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.

mugen rao

அவர் நடித்து கொண்டிருக்கும் வேலன் திரைப்படமும் ரிலீஸ்காக காத்து கொண்டுள்ளது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடலும் வேற லெவெலில் வைரலானது. இப்பொழுது தான் நடித்த சொந்த பாடலுக்கே குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் #VelanChallenge என்ற ஹேஷ்டேக் உடன் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MUGEN RAO (@themugenrao)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here