பாத்ரூம் சிங்கர் எம்எஸ் தோனி – இணையத்தை கலக்கும் தோனி பாட்டுப் பாடும் வீடியோ..!

0

இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, பியூஷ் சாவ்லா, பார்த்திவ் படேல் ஆகியோருடன் பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டுப் பாடும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகக்கோப்பை கடைசி ஆட்டம்..!

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து உடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் தோனி தனது ஸ்டைலில் பினிஷிங் செய்து வைப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அந்த போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய போட்டி அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்கள் பட்டியலிலும் தோனி பெயர் இல்லாததால் அவரின் ஓய்வு முடிவு குறித்து பலவாறு பேசப்பட்டன. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளதைப் பார்க்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பாத்ரூம் சிங்கர்..!

தோனியை பற்றிய அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தோனி, பியூஷ் சாவ்லா, பார்த்திவ் படேல் ஆகியோருடன் பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டுப் பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here