இந்திய அணியின் உலக கோப்பை நாயகனாக கருதப்படும் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால், ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, அடுத்த சீசனிலும் இவர் தனது பங்களிப்பை அளிக்க நாள்தோறும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, இளம் வீரர் ஒருவரை தனது பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். தல தோனியுடன் செல்வதை நம்ப முடியாத அந்த இளம் வீரர், செய்வது அறியாமல் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
MS Dhoni giving a lift to a young cricketer on his bike.
– A beautiful video….!!!!!pic.twitter.com/nfzKKN4Tdf
— Johns. (@CricCrazyJohns) September 15, 2023