வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டும் தல தோனி – வாழ்த்தும் ரசிகர்கள் !!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தற்போது வீடுகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தோனி வீடு வாங்கிய செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

மகேந்திரசிங் தோனி:

இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவரது ரசிகன் என சொல்வதில் ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தம். மகேந்திரசிங் தோனி அவர்களை ரசிகர்கள் பொதுவாக தல தோனி எனவே அன்பாய் அழைப்பார்கள். கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கையை விட இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம்.

பல சாதனைகளை படைத்தபோதிலும் எளிமையாக சிரித்த முகத்துடன் வருபவர் தோனி. இவரை கேப்டன் கூல் என்றே அனைவரும் அழைப்பார்கள். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையானாலும் பொறுமையாக இருப்பார் தல தோனி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தல தோனிக்கு மோட்டார் பைக்குகள் மீது அதிகமான காதல். எனவே இவரிடம் பல இரு சக்கர வாகனங்களும், பல நான்கு சக்கர வாகனங்களும் உள்ளது. இது போக குதிரைகள், செல்ல நாய்கள் போன்றவையும் வளர்த்து வருகிறார். தற்போது தல தோனி வீடுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் மும்பையில் ஒரு புது வீடு ஒன்றை வாங்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது புனேவில் வீடு இன்று வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here