தோனியை போலவே செயல்படும் ஹர்மன்பிரீத் கவுர்…, IPL & WPL வில் நிகழ்ந்த தனித்துவ சாதனை!!

0
தோனியை போலவே செயல்படும் ஹர்மன்பிரீத் கவுர்..., IPL & WPL வில் நிகழ்ந்த தனித்துவ சாதனை!!
தோனியை போலவே செயல்படும் ஹர்மன்பிரீத் கவுர்..., IPL & WPL வில் நிகழ்ந்த தனித்துவ சாதனை!!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், MI அணியின் ஹர்மன்பிரீத் கவுர், ஐபிஎல்லில் CSK அணியின் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

தோனி-ஹர்மன்பிரீத் கவுர்

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது 3வது லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, WPL லின் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வருகிறது. இதன் மூலம், WPL லின் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, IPL லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி சாதனை ஒன்றை சமன் செய்து உள்ளது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து மூன்று லீக் போட்டிகளில் வெற்றி பெற வைத்த முதல் கேப்டன் தோனியே ஆவார்.

வாங்கி டிமிக்கி கொடுத்த விஷால்.., பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிரபல தயாரிப்பாளர்!!

இவரும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை போன்ற, இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், WPLலில் மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற வழி நடத்திய முதல் கேப்டன் ஆவார். இதனால், தோனி மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் இடையே உள்ள கேப்டன் ஒற்றுமையை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இருவரது ஜெர்சி நம்பரும் 7 என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here