எம்.பி. மீது பாலியல் புகார் அளித்த பெண் பலி – வைரலாகும் பெண்ணின் லைவ் வீடியோ!!!

0

எம்.பி. அதுல் ராய் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்த நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார். உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ஆன அதுல் ராய் மீது அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் விளக்கம் அளித்தார். தீவிர விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும்போது எம்.பி.க்கு அதிக அளவிலான சலுகைகளை அளித்து வருவதாக செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண் காவல்துறை அதிகாரி சுதிர் மீண்டும் புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

புகார் அளித்த பெண்ணின் லைவ் வீடியோ!!!

கடந்த 17ஆம் தேதி திடீரென டெல்லி உச்சநீதிமன்றம் வாயில் அருகே நின்று தனது காதலருடன், அந்தப் பெண் தீக்குளித்துள்ளார். இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் டிரீட்மெண்ட் கொடுத்து வந்தார்கள். அந்த பெண்ணின் காதலன் கடந்த சனிக்கிழமை அன்னைக்கு உயிரிழந்தார். அந்த பெண் தற்போது சிகிச்சை பனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீக்குளிப்பதற்கு முன்பாகவே அவர்கள் பேஸ்புக்கில் ஒரு லைவ் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அந்த பெண் எம்பி மற்றும் பல அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் பேசிய வீடியோ இப்ப சோசியல் மீடியாவை வைரலாகி இருக்கு, என்ன சொன்னாங்கனு வீடியோல பாருங்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here