அரசு பெண் ஊழியர்களுக்கு 7 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.., , முதல்வர் அறிவிப்பு!!

0
அரசு பெண் ஊழியர்களுக்கு 7 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.., , முதல்வர் அறிவிப்பு!!
அரசு பெண் ஊழியர்களுக்கு 7 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.., , முதல்வர் அறிவிப்பு!!

மாநிலத்தில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு, 7 நாட்கள் கூடுதல் சாதாரண விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பு :

நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி, பல மாநிலங்களில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக 7 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முடிவெடுத்துள்ளதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதால் இந்த CL (casual leave) விடுப்பை வழங்குவதாக அறிவித்தார்.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான “ஸ்மைல் திட்டம்” தொடக்கம்., அமைச்சரின் நடவடிக்கையால் குஷியில் பெற்றோர்கள்!!

இது போக 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பெண்களுக்கு நிதி கல்வியறிவு சார்ந்த பாடங்கள் நடத்தப்படும் என்றும், பெண்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் செய்யும் வழிமுறைகளை கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மாநில அரசின் இந்த திட்டத்திற்கு பெண்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here