சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..,, இந்த அருவியில் குளிக்க தடை..,, வெளியான முக்கிய தகவல்!!

0
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..,, இந்த அருவியில் குளிக்க தடை..,, வெளியான முக்கிய தகவல்!!
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..,, இந்த அருவியில் குளிக்க தடை..,, வெளியான முக்கிய தகவல்!!

சுற்றுலா பயணிகள் தங்களது நாட்களை கழிக்க பல சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அதில் ஒரு இடம் தான் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி. இந்த அருவியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று புதன்கிழமை சுருளி அருவியின் நீர் வரத்தை கண்காணிப்பதற்காக ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் சென்றுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த சமயத்தில் அருவியின் வளாகத்தில் யானைக்கூட்டம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை சுருளி அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பினர். மேலும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளதாக ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்களே, செவ்வாய் கிழமையில் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here