திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் பிரபல சீரியல் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியல் தற்போது வரை ஒளிபரப்பாமல் இருப்பதற்கான காரணத்தை சீரியல் குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மௌன ராகம்:

மௌன ராகம் சீரியல் சீசன் 2 பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது. சக்திக்கும் வருணுக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அனைவரும் ஆரம்பத்தில் தருணுக்கும், சக்திக்கும் தான் ஜோடி என்று நினைத்து கொண்டிருந்தனர். ஆனாலும் பலருக்கும் ஷாக்களிக்கும் விதத்தில் வருணுடன் திருமணம் நடக்கவுள்ளது. ஒரு வாரத்தில் அந்த சீரியலில் என்னென்னவோ நடந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி பரபரப்பான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் தான் லாக்டவுன் போடப்பட்டது.

காட்சிகள் பற்றாக்குறை காரணத்தால் இந்த சீரியலில் பழைய காட்சிகள் தான் ஒளிபரப்பானது. இப்பொழுது அனைத்து சீரியல்களும் தொடங்கப்பட்ட நிலையில் மௌன ராகம் சீரியல் மட்டும் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதற்கான காரணத்தை சீரியல் குழு வெளியிட்டுள்ளது. அதாவது தற்காலிகமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளதாம். மேலும் கூடிய விரைவில் இந்த சீரியல் தொடங்கும் என்றும் கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here