மௌன ராகம் 2 – சக்திக்கு ஜோடி வருணா?? தருணா?? வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மௌன ராகம் சீரியலில் தற்போது சக்திக்கும் வருணுக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா?? என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷூட்டிங் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மௌன ராகம்

மௌன ராகம் சீசன் 1 குழந்தைகளின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

சக்தி தான் கார்த்திக்கின் மகள் என்று நிரூபிக்க பலரும் போராடி வந்த நிலையில் அந்த உண்மை ஒரு நாள் வெளிவந்தது. காதம்பரியின் இம்சையால் அந்த இடத்தை விட்டே கிளம்பி தனியாக வாழ்ந்து வந்தனர்.

அதன் பிறகு சக்தி ஸ்ருதி வளர்ந்து தற்போது 2வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சக்தி கார்த்திக்கிடம் தான் யார் என்றே சொல்லாமல் வேலை பார்க்கிறார். காதம்பரிக்கு அடிக்கடி சந்தேகம் வேறு எழுகிறது.

மேலும் தருண் வேறு சக்தியிடம் தன் காதலை சொல்ல ஸ்ருதி சக்தியை பரம எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டார். சக்தி தன் அம்மாவின் உயிரை காப்பாற்ற வருணை திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார். தற்போது லாக்டவுனுக்கு பிறகு திங்கள் முதல் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் சக்திக்கு ஜோடி வருண் தானா?? அல்லது தருணா?? என்பது வரும் எபிசோடுகளில் தான் தெரியும். இந்நிலையில் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here