இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு…, நீதித்துறை விடுத்த அதிரடி உத்தரவு!!

0
இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு..., நீதித்துறை விடுத்த அதிரடி உத்தரவு!!
ஒவ்வொரு மாநில அரசும் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு வகையான விதிகளை விதித்து சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதில் குறிப்பாக, இரு சக்கர வாகன விபத்துகளை அதிக அளவில் ஏற்படுவதால், 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, 9 ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கு அவனது பெற்றோர் இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்துள்ளனர். இதற்கு, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 99A வின் படி 18 வயது நிறைவடையாத சிறுவர்களுக்கு வாகனங்களை வழங்கிய பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து, பெற்றோருக்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருட காலத்திற்கு இருசக்கர வாகனத்தின் பதிவையும் நிறுத்தி வைக்க கோரி உத்தரவு விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here