மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை – ஆபர்கள் & சிறப்பம்சங்கள் இதோ!!

0

பிளிப்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் பல வித வங்கிகளின் தள்ளுபடி சலுகைகளுடன், ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி 5ஜி

உள்ளீட்டு திறன் – 6ஜிபி ராம் +128ஜிபி ரோம்
வண்ணங்கள் – வால்கோனிக் க்ரே, பிராஸ்டேட் சில்வர்
டிஸ்பிளே – 6.7 இன்ச் (16.94 செமீ) ஹடிஆர் 10
பின்புற கேமரா – 48MP பிரைமரி லென்ஸ் +18MP வைடு ஆங்கிள் லென்ஸ் +2MP மேக்ரோ லென்ஸ்
செல்பி – 16MP பன்ச்ஹோல் கேமரா
பேட்டரி – 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி
ப்ராஸ்ஸஸர் – 750ஜி ஸ்னாப்ட்ராகோன்

மோட்டோ ஜி 5ஜி போனில் 20 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் சார்ஜ் பற்றிய கவலை இல்லை. 4 ஜியை விட மிக அதிக திறன் கொண்ட டேட்டா ஸ்பீட் கொண்டது. கிளிக் செய்த உடனே சங்ஸ் நியூஸ் கேம்ஸ் உள்ளிட்டவை உடனே டவுன்லோட் செய்துவிடும். மேலும், வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்புகளை கொண்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை – ரூ.20,999.

ஜெய் & அஞ்சலி பிரேக்கப்புக்கு இந்த நடிகை தான் காரணமாம்!!

எச்டிஎப்சி வங்கி கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.1000/- தள்ளுபடி, எச்டிஎப்சி வங்கி கிரெடிட்/டெபிட் கார்டு இஎம்ஐ மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.1750/- தள்ளுபடி, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 5% அன்லிமிடெட் கேஷ்பேக்.,மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here