சொந்த மண்ணில் கெத்து காட்டும் இந்தியா…, மிரண்டு போன எதிரணிகள்!!

0
சொந்த மண்ணில் கெத்து காட்டும் இந்தியா..., மிரண்டு போன எதிரணிகள்!!
சொந்த மண்ணில் கெத்து காட்டும் இந்தியா..., மிரண்டு போன எதிரணிகள்!!

இந்திய அணி தனது சொந்த மண்ணில் அசைக்க முடியாத நிலையில் இருப்பதால், 50 ஓவர் உலக கோப்பை குறித்து எதிரணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்திய அணி:

இந்திய அணி இந்த வருட தொடக்கத்தில் இருந்து, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடியது. இதுவரை, 12 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 10ல் வெற்றி பெற்றதுடன் அனைத்து தொடர்களையும் வென்று, மற்ற அணிகளை அச்சுறுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், கடந்த 10 ஆண்டுகளில், இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடி உள்ள 56 தொடர்களில் 48 தொடர்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும், டி20 போட்டிகளை பொறுத்த வரையில், தனது சொந்த மண்ணில் 78 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 50 போட்டிகளை வென்ற முதல் அணியாக திகழ்கிறது.

ICC T20i மகளிர் உலக கோப்பை.., கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!

இதன் மூலம், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என எதிரணிகள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு அடுத்ததாக, நியூசிலாந்து அணி 80 போட்டிகளில் 42லும், தென் ஆப்பிரிக்கா அணி 70 போட்டிகளில் 37லும், ஆஸ்திரேலிய அணி 60 போட்டிகளில் 36லும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 போட்டிகளில் 36லும் தனது சொந்த மண்ணில் வெற்றி பெற்று டாப் 5 இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here