தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா…, தொடரும் சாதனை பட்டியல்!!

0
தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா..., தொடரும் சாதனை பட்டியல்!!
தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா..., தொடரும் சாதனை பட்டியல்!!

இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம், ரோஹித் சர்மா ஒரு மறைமுகமான சாதனை படைத்து தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ரோஹித் சர்மா:

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனமும் தற்போது டி20 உலக கோப்பையை யார் வெல்வார் என்பதை நோக்கியே உள்ளது. இந்த உலக கோப்பை மூலம் டி20 போட்டிகளில் பல்வேறு சாதனை பட்டியலும் நீண்டு வருகிறது. இதில், இந்திய வீரரான விராட் கோஹ்லி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரை போன்று, சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார். இந்த சாதனைகள் அனைத்தும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி சமீபத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு மறைமுகமான சாதனை ஒன்றை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

அந்த வீரருக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் ராகுல் டிராவிட்.., இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்., வெற்றி கைகூடுமா??

அதாவது, SENA என்றால் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முதல் எழுத்தை குறிக்கும். இந்த நாடுகளில்(SENA) நடைபெற்ற போட்டிகளில், அதிக வெற்றிகளை குவித்த அணியில் இருந்த ஆசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் விளையாடி 79 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இவரை தொடர்ந்து, இலங்கையின் ஜெயவர்த்தனே 78, இந்தியாவின் தோனி 77 மற்றும் விராட் கோஹ்லி 71 போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here