T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் டாப் லிஸ்ட் இதோ!!

0
T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் டாப் லிஸ்ட் இதோ!!
T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் டாப் லிஸ்ட் இதோ!!

T20 போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான டாப் லிஸ்ட் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிக விக்கெட்டுகள்:

உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரால் விரும்பப்படும் தொடராக டி20 தொடர் உள்ளது. இந்த டி20 தொடரில் தான், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை காட்டிலும் சாதனைப் பட்டியலும் நீண்டு உள்ளது. இதில், இந்திய வீரர்களை பொறுத்த வரையில், பேட்டிங்கில் சிறந்து விளங்கினாலும் பவுலிங்கில் பெரிய அளவில் சாதனைகளை செய்ய தவறி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸின் டுவைன் பிராவோ 614 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (496), வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் (474) விக்கெட்டுகளுடன் டாப் 3யில் உள்ளனர்.

IND vs NZ: பவர் பிளேவில் மிரட்டிய முகமது ஷமி.., பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து!!!

மேலும், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (466), பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் (436), பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் (401) மற்றும் இலங்கையின் மலிங்கா (390) விக்கெட்டுகளுடன் டாப் ஆர்டரில் உள்ளனர். இதில், டாப் 10 வீரர்களில் ஒரு இந்தியர் கூட இல்லாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here